டென்னிஸ்
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறிய ஹோல்கர் ரூனே
- டென்மார்க்கின் ஹோல்கர் ரூனே, பிரான்சின் கெயில் மான்பில்ஸ் உடன் மோதினார்.
- நாளை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் ரூனே, பிரிட்டனின் ஜாக் டிராப்பர் உடன் மோத உள்ளார்.
சின்சினாட்டி:
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றான ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான டென்மார்க்கின் ஹோல்கர் ரூனே, பிரான்சின் கெயில் மான்பில்ஸ் உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 3-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த ஹோல்கர் ரூனே, ஆட்டத்தின் அடுத்த இரு செட்களை 6-3, 6-4 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். இதன் மூலம் ஹோல்கர் ரூனே 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் பிரான்சின் கெயில் மான்பில்ஸை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் ரூனே, பிரிட்டனின் ஜாக் டிராப்பர் உடன் மோத உள்ளார்.