ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்த ரஷிய வீரர்
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரஷிய வீரர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
சிட்னி:
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதற்கிடையே, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் 2வது சுற்று போட்டிகள் நேற்று நடந்தன.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 5 வீரரும், ரஷியாவைச் சேர்ந்தவருமான டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் லேர்னர் டைன் உடன் மோதினார்.
இதில் அமெரிக்க வீரர் 6-3, 7-6 (7-4) என முதல் இரு செட்களை வென்றார். இதனால் சுதாரித்துக் கொண்ட மெத்வதேவ் அடுத்த இரு செட்களை 7-6 (10-8), 6-1 என போராடி வென்றார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டை அமெரிக்க வீரர் 7-6 (10-7) என வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் அனுபவம் வாய்ந்தவரும், தரவரிசையில் 5வது இடத்தில் உள்ளவருமானமெத்வதேவ் 2வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.
19 வயது ஆன அமெரிக்க வீரர் லேர்னர் டைன், மெத்வதேவ் இடையிலான போட்டி 4 மணி 49 நிமிடம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.