டென்னிஸ்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சபலென்கா, படோசா 2வது சுற்றுக்கு முன்னேற்றம்
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா வெற்றி பெற்றார்.
சிட்னி:
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதற்கிடையே, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று போட்டிகள் நேற்று தொடங்கின.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீராங்கனையும், பெலாரசைச் சேர்ந்தவருமான சபலென்கா, அமெரிக்காவின் ஸ்லோனே ஸ்டீபன்ஸ் உடன் மோதினார்.
இதில் சபலென்கா 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ஸ்பெயினின் பவுலா படோசா, சீனாவின் வாங் ஜின்யு உடன் மோதினார். இதில் படோசா 6-3, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.