டென்னிஸ்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் சுமித் நாகல் செக் குடியரசு வீரருடன் மோதல்
- கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடங்குகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சுமித் நாகல் இன்று விளையாட உள்ளார்.
சிட்னி:
டென்னிஸ் உலகில் ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடங்குகிறது.
அதன்படி, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தகுதிபெற்ற ஒரே இந்தியரான சுமித் நாகல், செக் குடியரசின் தாமஸ் மச்சாக் உடன் மோதுகிறார்.