டென்னிஸ்

அடிலெய்டு டென்னிஸ்: அரையிறுதியில் மேடிசன் கீஸ், ஜெசிகா பெகுலா வெற்றி

Published On 2025-01-10 17:12 IST   |   Update On 2025-01-10 17:12:00 IST
  • இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் மேடிசன் கீஸ், ஜெசிகா பெகுலா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.
  • நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் மேடிசன் கீஸ், ஜெசிகா பெகுலா மோதவுள்ளனர்.

அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ், ரஷியாவின் லியுட்மிலா சாம்சோனோவா உடன் மோதினார்.

இந்த போட்டியில் முதல் செட்டை 7-5 என்ற புள்ளிக்கணக்கில் லியுட்மிலா சாம்சோனோவாவும், 2-வது செட்டை 7-5 என்ற புள்ளிக்கணக்கில் மேடிசன் கீஸும் கைப்பற்றினர். தொடர்ந்து நடைபெற்ற 3-வது செட்டில் 3-0 என்ற புள்ளிக்கணக்கில் மேடிசன் கீஸ் முன்னிலையில் இருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக லியுட்மிலா சாம்சோனோவா காயம் அடைந்தார். இதன் காரணமாக அவர் போட்டியில் இருந்து வெளியேறினார். இதனால் மேடிசன் கீஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு அரையிறுதி போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா- கஜகஸ்தானின் யூலியா புடின்ட்சேவா ஆகியோர் மோதினர். இதில் 7-4, 6-3 என்ற செட் கணக்கில் பெகுலா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் மேடிசன் கீஸ், ஜெசிகா பெகுலா மோதவுள்ளனர்.

Tags:    

Similar News