டென்னிஸ்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் யூகி பாம்ப்ரி ஜோடி தோல்வி
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
- ஆண்கள் இரட்டையர் பிரிவில் யூகி பாம்ப்ரி ஜோடி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
சிட்னி:
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதற்கிடையே, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரான்சின் அல்பானோ ஒலிவெட்டி ஜோடி, ஆஸ்திரேலியாவின் ஆடம் வால்டன்-டிரிஸ்டன் ஜோடியுடன் மோதியது.
இதில் ஆஸ்திரேலிய ஜோடி 6-2, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்றது. இதன்மூலம் யூகி பாம்ப்ரி ஜோடி முதல் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறியது.