டென்னிஸ்
இந்தியன் வெல்ஸ் ஓபன்: காலிறுதிக்கு முன்னேறிய மெத்வதேவ்.. 4-வது சுற்றில் சிட்சிபாஸ் தோல்வி
- மெத்வதேவ் 6-4, 6-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
- இந்த போட்டியில் 6-4, 6-4 என்ற கணக்கில் சிட்சிபாஸை ஹோல்கர் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்தியன் வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷ்ய வீரர் மேட்தேவ் மற்றும் அமெரிக்க வீரர் டாமி பால் மோதினர்.
இந்த போட்டியில் மெத்வதேவ் 6-4, 6-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் மற்றும் டென்மார்க் வீரரான ஹோல்கர் மோதினர். இந்த போட்டியில் 6-4, 6-4 என்ற கணக்கில் சிட்சிபாஸை ஹோல்கர் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.