டென்னிஸ்
null
இந்தியன் வெல்ஸ் ஓபன்: ஜெசிகா பெகுலா, கரோலினா முச்சோவா 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்
- பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஜெசிகா பெகுலா, சீனாவின் வாங் சின்யு உடன் மோதினர்.
- இதில் ஜெசிகா பெகுலா 6-2 மற்றும் 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்றார்.
இந்தியன் வெல்ஸ் ஓபன்:
இந்தியன் வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சீனாவின் வாங் சின்யு உடன் மோதினர்.
இதில் முழுவதுமாக ஆதிக்கம் செலுத்திய ஜெசிகா பெகுலா 6-2 மற்றும் 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு (4-வது சுற்று) தகுதி பெற்றுள்ளார். இவர் 4-வது சுற்றில் ஸ்விடோலினா உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.
இதன் மற்றொரு ஆட்டத்தில் செக் வீராங்கனை கரோலினா முச்சோவாவும் சக நாட்டவரான கேட்டெரினா சினியாகோவாவும் மோதினர். இதில் 7-5, 6-1 என்ற கணக்கில் கரோலினா முச்சோவா வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.