டென்னிஸ்

இந்தியன் வெல்ஸ் ஓபன்: முன்னாள் நம்பர் 1 வீராங்கனை முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி

Published On 2025-03-07 04:53 IST   |   Update On 2025-03-07 04:53:00 IST
  • இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
  • இதன் முதல் சுற்றில் முன்னாள் நம்பர் 1 வீராங்கனை தோல்வி அடைந்தார்.

வாஷிங்டன்:

இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

ஜப்பான் வீராங்கனையும், முன்னாள் நம்பர் 1 வீராங்கனையுமான நவோமி ஒசாகா, கொலம்பியாவின் கமீலா ஒசோரியோ உடன் மோதினார்.

இதில் நவோமி ஒசாகா 4-6, 4-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

Tags:    

Similar News