டென்னிஸ்
துபாய் ஓபன் டென்னிஸ்: யூகி பாம்ப்ரி ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
- ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- ஆண்கள் இரட்டையர் அரையிறுதியில் யூகி பாம்ப்ரி ஜோடி வெற்றி பெற்றது.
துபாய்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதி சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-ஆஸ்திரேலியாவின் அலெக்சின் பாப்ரின் ஜோடி, ஆஸ்திரேலியாவின் ஜான் பியர்ஸ்-பிரிட்டனின் ஜேமி முர்ரே உடன் மோதியது.
இதில் முதல் செட்டை யூகி பாம்ப்ரி ஜோடி 6-2 என கைப்பற்றியது. 2வது செட்டை 6-4 என யூகி பாம்ப்ரி ஜோடி இழந்தது.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி செட்டை யூகி பாம்ப்ரி ஜோடி 10-7 என வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.