டென்னிஸ்
ரியோ ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்த ஸ்வரேவ்
- ரியோ ஓபன் டென்னிஸ் தொடர் பிரேசிலில் நடந்து வருகிறது.
- இதில் ஜெர்மனியின் ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
ரியோ டி ஜெனிரோ:
ரியோ ஓபன் டென்னிஸ் தொடர் பிரேசிலில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ஜெர்மனியின் ஸ்வரேவ், அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ காம்சேனா உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 6-4 என கைப்பற்றிய ஸ்வரேவ், அடுத்த இரு செட்களை 3-6, 4-6 என இழந்தார். இதன்மூலம் ரியோ ஓபன் தொடரில் இருந்து வெளியேறினார்.