டென்னிஸ்
துபாய் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்ற 17 வயது ரஷிய வீராங்கனை
- ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- இறுதிச்சுற்றில் டென்மார்க் வீராங்கனை கிளாரா தோல்வி அடைந்தார்.
துபாய்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரிவா, டென்மார்க் வீராங்கனை கிளாரா டாசன் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஆண்ட்ரிவா 7-6 (7-1), 6-1 என எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.