டென்னிஸ்

கத்தார் ஓபன்: இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற பிரிட்டன் ஜோடி

Published On 2025-02-22 22:59 IST   |   Update On 2025-02-22 22:59:00 IST
  • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்தது.
  • ஆண்கள் இரட்டையரில் பிரிட்டன் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

தோஹா:

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்றது.

இதில் இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் பிரிட்டனின் லாயிட் கிளாஸ்பூல்-ஜூலியன் கேஷ் ஜோடி, சக நாட்டின் ஜோ சாலிஸ்பெரி-நீல் கப்ஸ்கி ஜோடியுடன் மோதியது.

இதில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய லாயிட்-ஜூலியன் ஜோடி 6-3, 6-2 என எளிதில் வென்று சாம்பியன் பட்டம் பெற்று அசத்தியது.

Tags:    

Similar News