டென்னிஸ்
இந்தியன் வெல்ஸ் ஓபன்: 2வது சுற்றுக்கு முன்னேறியது யூகி பாம்ப்ரி ஜோடி
- இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- இதன் முதல் சுற்றில் யூகி பாம்ப்ரி ஜோடி வெற்றி பெற்றது.
வாஷிங்டன்:
இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்று போட்டி நேற்று நடந்தது.
இதில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-ஸ்வீடனின் ஆண்ட்ரே கோரன்சன் ஜோடி, போலந்தின் ஜேன் ஜிலின்ஸ்கி-பெல்ஜியத்தின் சாண்டர் கில்லி ஜோடி உடன் மோதியது.
இதில் முதல் செட்டை 3-6 என இழந்த யூகி பாம்ப்ரி ஜோடி அடுத்த இரு செட்களை 7-6 (7-5), 10-8 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.