டென்னிஸ்
இந்தியன் வெல்ஸ் ஓபன்: கலப்பு இரட்டையரில் சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலி ஜோடி
- இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- இறுதிப்போட்டியில் இத்தாலி ஜோடி வெற்றி பெற்றது.
வாஷிங்டன்:
இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டி நடைபெற்றது.
இதில் இத்தாலியின் சாரா எர்ரானி-ஆண்ட்ரியா வவசோரி ஜோடி, குரோசிய வீரர் மேட் பவிக்-அமெரிக்காவின் பெத்தானிக் ஜோடியுடன் மோதியது.
இதில் முதல் செட்டை 6-7 என இழந்த இத்தாலி ஜோடி, அடுத்த இரு செட்களை 6-3, 10-8 என வென்று சாம்பியன் பட்டம் வென்றது.