செய்திகள்
அரிசியை சாலையில் கொட்டி பொதுமக்கள் மறியல்
பெரியகுளத்தில் ரேசன் பொருட்கள் முறையாக வழங்காததை கண்டித்து ரேசன் அரிசியை ரோட்டில் கொட்டி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே எண்டப்புளி கிராமத்தில் 350 ரேசன் கார்டுகள் உள்ளன. இங்குள்ள ரேசன் கடைகளில் முறையாக எந்த பொருளும் வழங்குவதில்லை. கார்டுதாரர்களுக்கு வழங்காமலேயே பொருட்கள் வழங்கியதாக எஸ்.எம்.எஸ். அனுப்புவதாக புகார்கள் எழுந்தது. தரமான அரிசியை கள்ள மார்க்கெட்டில் விற்று விட்டு தரமற்ற அரிசியை வினியோகிப்பதாக இந்த கிராம மக்கள் புகார் கூறி வந்தனர்.
ஆத்திரமடைந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தேனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் காலிக்குடங்களுடனும் தரமற்ற ரேசன் அரிசியை சாலையில் கொட்டியும் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த பெரியகுளம் தென்கரை இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், வடகரை இன்ஸ்பெக்டர் வினோஜி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
இதனால் தேனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.