செய்திகள்

தேனி கலெக்டர் அலுவலகத்தில் கந்து வட்டி கொடுமையால் தீக்குளிக்க முயன்ற தாய்-மகன்

Published On 2017-10-24 10:07 GMT   |   Update On 2017-10-24 10:07 GMT
தேனி கலெக்டர் அலுவலகத்தில் கந்து வட்டி கொடுமையால் தீக்குளிக்க முயன்ற தாய் மற்றும் மகனை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
தேனி:

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா குமணன் தொழு பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன். இவர் தனது குடும்ப தேவைக்காக அதே பகுதியைச் சேர்ந்த சிலரிடம் கடன் வாங்கி இருந்தார். தான் வாங்கிய கடனுக்காக பல வருடங்கள் வட்டி கட்டியும் மேலும் அசல் மற்றும் வட்டி தர வேண்டும் என அவரை நெருக்கடி செய்து வந்துள்ளனர்.

இதனால் தனது தாய் சரஸ்வதியுடன் இன்று தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு ஜெகதீசன் வந்தார். அங்கு இருவரும் தங்கள் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதைப்பார்த்ததும் அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களிடம் விசாரித்த போது தங்களுக்கு நேர்ந்த கந்து வட்டி கொடுமையை கண்ணீர் மல்க தெரிவித்தனர். பின்னர் போலீசாரிடம் புகார் மனு அளித்தனர்.

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கூலித் தொழிலாளி இசக்கிமுத்து தனது குடும்பத்துடன் நேற்று தீக்குளித்தார். இதில் 3 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது தேனியிலும் தாய்-மகன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News