செய்திகள்
புதுக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கந்தர்வக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள சோழகம்பட்டியை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 48), விவசாயி. இவருக்கு சொந்தமாக அப்பகுதியில் வயல் உள்ளது. இன்று காலை வயலில் டிராக்டரை வைத்து உழும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது மேலே சென்ற மின்கம்பி திடீரென அறுந்து டிராக்டர் மீது விழுந்தது. இதில் டிராக்டரில் மின்சாரம் பாய்ந்து பழனிவேலை தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.
உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கந்தர்வக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பழனிவேலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனேவே இறந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் அறந்தாங்கி பகுதியில் மின்சாரம் தாக்கியதில் விவசாயி பாலையா என்பவர் பலியானார். இந்நிலையில் இன்று பழனிவேல் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.