செய்திகள்
பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் ஆன்மீக தலைவர்கள் மாநாடு- கவர்னர் துவக்கி வைக்கிறார்
சென்னை அருகே பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் ஆன்மீக தலைவர்கள் மாநாட்டை வரும் ஞாயிற்றுக்கிழமை கவர்னர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்து உரையாற்ற உள்ளார்.
சென்னை:
பிரம்மா குமாரிகள் இயக்கம் சார்பில் சென்னை அருகே உள்ள சுங்குவார்சத்திரத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமையன்று (செப்.15), “இறைவன் ஒருவரே, உலகம் ஒரு குடும்பம்” என்ற தலைப்பில் மதத் தலைவர்களின் ஆன்மீக மாநாடு மற்றும் அவர்களை கவுரவிக்கும் விழா நடைபெற உள்ளது.
காலை 11 மணியளவில் ஆன்மீக தலைவர்கள், தன்னார்வ தொண்டர்களுக்கான தேசிய மாநாடு தொடங்குகிறது. பிரம்மா குமாரி உஷா பென் துவக்க உரை நிகழ்த்துகிறார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றுகிறார்.
அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், ராஜயோகி பிரம்மா குமாரி ராம்நாத் (மவுன்ட் அபு), கிரிதாரி தாசா (இஸ்கான், மறைமலைநகர்), சக்த ஸ்ரீ வாராஜி மண்கண்ட சுவாமி (கோவை), ஸ்ரீமத் சுவாமி சைதன்யநந்தர்ஜி (கன்னியாகுமரி விவேகானந்த ஆசிரமம்) உள்ளிட்டோர் உரையாற்ற உள்ளனர். மாநாட்டில் பங்கேற்போருக்கு காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு வழங்கப்படும்.
இந்த மாநாடடில் கலந்துகொள்ள கட்டணம் ஏதும் இல்லை. ஆனால் தங்கள் பெயரை அருகில் உள்ள பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் கிளை நிலையங்களிலோ அல்லது http://www/happy-village.org/Register.html என்ற வலைத்தளத்திலோ முன்பதிவு செய்ய வேண்டும்.

சுங்குவார்சத்திரம் பொடவூர் கிராமத்தில் உள்ள பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் சிறப்பு பயிற்சி மையத்தில் (ஹாப்பி வில்லேஜ்) இந்த நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
ஞாயிறு காலை 9 மணியளவில் ராஜயோகப் பயிற்சியைத் தொடர்ந்து, சமுதாய நல்லிணக்கத்தில் ஆன்மீகத்தின் பங்கு என்ற தலைப்பில் பிரம்மா குமாரி உஷா பென் சிறப்புரையாற்றுகிறார்.