செய்திகள்
மழை (கோப்பு படம்)

சென்னை, புறநகர் பகுதிகளில் மிதமான மழை

Published On 2020-06-11 02:51 GMT   |   Update On 2020-06-11 02:51 GMT
சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் இன்று காலை முதலே விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது.
சென்னை:

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகம்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதேசமயம், வங்கக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக பலத்த காற்றுவீசும் என்று எச்சரித்திருந்தது.

இந்நிலையில், சென்னையில் நேற்று முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்தது. இன்று காலை முதலே சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது.

தரமணி, மயிலாப்பூர், சென்ட்ரல், கீழ்ப்பாக்கம், நுங்கம்பாக்கம், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை மற்றும் வடசென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

Similar News