தமிழ்நாடு

அண்ணாமலை

திமுகவின் முடிவுரை ஒவ்வொரு நாளும் எழுதப்பட்டுக் கொண்டு இருக்கிறது- அண்ணாமலை

Published On 2022-11-20 21:30 IST   |   Update On 2022-11-20 21:30:00 IST
  • கூட்டுறவுத்துறை அமைச்சர் சரி இல்லை என்று நிதி அமைச்சர் சொல்கிறார்.
  • சாராய வருமானம் உயர்ந்தாலும், அரசுக்கு வருமானம் வரவில்லை என்கிறார்.

நீலகிரி மாவட்டம் கூடலூரில் டான்டீ தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:-

இலங்கையிலிருந்து மீண்டும் தமிழகம் வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக திராவிடக் கட்சிகள் நடத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் பிரதமர் மோடி, பதவியேற்ற பிறகு இலங்கையில் வசிக்கும் மலைவாழ் தமிழர்களுக்கு 10 ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுத்தார். வடக்குப் பகுதியில் இருக்கின்ற தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுத்தார். 


இதையெல்லாம் செய்து கொடுத்த பிரதமர் மோடியின் கட்சியிலிருந்து நாங்கள் பேசுகிறோம். பேசுவதற்கு எங்களுக்கு உரிமை இருக்கிறது. இப்போதும் டான்டீ நிறுவனத்தை எங்களுக்கு வேண்டாம், இந்த 5315 ஏக்கரை மத்திய அரசே எடுத்துக் கொள்ளுங்கள், மத்திய அரசே இந்த நிறுவனத்தை நடத்துங்கள் என்று தமிழக முதல்வர் எழுத்துப்பூர்வமாக எழுதி தந்தால், டான்டீ நிறுவனத்தை மத்திய அரசு எடுத்து நடத்துவதற்கு நாங்கள் தயார்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் சரி இல்லை என்று தமிழக நிதி அமைச்சர் சொல்கிறார். அவர் சரியாக வேலை பார்க்கவில்லை என்று கூறுகிறார். மேலும் சாராய வருமானம் உயர்ந்து கொண்டிருக்கிறது, ஆனால் அரசுக்கு வருமானம் வரவில்லை என்கிறார். அடிப்படை சுய ஒழுக்கம் இல்லாத கட்சி ரொம்ப நாள் நீடிக்காது. திமுகவின் முடிவுரை ஒவ்வொரு நாளும் எழுதப்பட்டுக் கொண்டு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News