செங்கல்பட்டு-கும்மிடிப்பூண்டி இடையே ரெயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
- செங்கல்பட்டு-கும்மிடிப்பூண்டி இடையே காலை 10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி இடையே நாளை பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.
- சூலூர்பேட்டை- சென்டிரல் இடையே மதியம் 12.35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி மற்றும் சென்டிரல் இடையே நாளை பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சென்னை சென்டிரல் ரெயில் நிலையம்-கூடூர் ரெயில் நிலையம் இடையே நடைபெற்று வரும் பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
* செங்கல்பட்டு-கும்மிடிப்பூண்டி இடையே காலை 10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி இடையே நாளை பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.
* சென்டிரல்- கும்மிடிப்பூண்டி இடையே மதியம் 12.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் மீஞ்சூர் மற்றும் கும்மிடிப்பூண்டி இடையே நாளை பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.
* கடற்கரை- சூலூர்பேட்டை இடையே மதியம் 12.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் மீஞ்சூர் மற்றும் சூலூர்பேட்டை இடையே நாளை பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.
* சூலூர்பேட்டை- சென்டிரல் இடையே மதியம் 12.35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி மற்றும் சென்டிரல் இடையே நாளை பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.
* கும்மிடிப்பூண்டி- சென்டிரல் இடையே மதியம் 1.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி மற்றும் மீஞ்சூர் இடையே பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.