வணிகர் சங்கப் பேரவை தலைவர் வெள்ளையன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
- வெள்ளையன் (76) இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.
- வெள்ளையன் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.
தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளையன் (76) இன்று உடல்நலக்குறைவால் காலமானார்
நுரையீரல் தொற்று உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த அவர், உடல்நலக்குறைவால் அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
வெள்ளையன் அவர்கள் மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது இரங்கல் செய்தியில், "தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருத்தினேன்.
வணிகர் பெருமக்களின் நலனுக்காக உழைத்த அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையைச் சேர்ந்த அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.