தமிழ்நாடு

பஸ் படிக்கட்டில் இருந்து போதை வாலிபரை கண்டக்டர் கீழே தள்ளி விட்ட காட்சி. (சமூக வலைதளங்களில் பரவிய படம்).


அரசு பஸ் படிக்கட்டில் இருந்து போதை வாலிபரை கீழே தள்ளிய கண்டக்டர் சஸ்பெண்டு

Published On 2022-11-20 15:46 IST   |   Update On 2022-11-20 15:46:00 IST
  • கண்டக்டர் பிரகாஷ் போதை வாலிபர் மீது தண்ணீரை ஊற்றி அவரை பஸ் படிக்கட்டில் இருந்து கீழே தள்ளி விட்டார்.
  • கண்டக்டர் பிரகாசை சஸ்பெண்டு செய்து விழுப்புரம் கோட்ட மேலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

வந்தவாசி:

பெங்களூருவில் இருந்து அரசு பஸ் கடந்த 17-ந் தேதி நள்ளிரவு வந்தவாசிக்கு வந்தது.

வந்தவாசி பழைய பஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்ட பஸ்சில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கினர்.

அப்போது மதுபோதையில் இருந்த ஒரு வாலிபர் மட்டும் இறங்காமல் இருந்தார். கண்டக்டர் பிரகாஷ் அவரை இறங்கும்படி கூறினார். போதையில் வாலிபர் பஸ் படிக்கட்டில் தள்ளாடியபடி கீழே இறங்கி வந்தார்.

அப்போது கண்டக்டர் பிரகாஷ் போதை வாலிபர் மீது தண்ணீரை ஊற்றி அவரை பஸ் படிக்கட்டில் இருந்து கீழே தள்ளி விட்டார். இதில் அவர் சாலையில் விழுந்தார்.

இதைத்தொடர்ந்து அந்த பஸ் டெப்போவை நோக்கி புறப்பட்டுச் சென்றது. மதுபோதை பயணியை பஸ் படிக்கட்டில் இருந்து கண்டக்டர் கீழே தள்ளிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதுகுறித்து டெப்போ உதவி பொறியாளர் துரை கூறுகையில்:-

அவலூர்பேட்டையில் ஏறிய அந்த பயணி பஸ்சிலேயே மது அருந்தியும், பஸ்சிலேயே சிறுநீர் கழித்தும் பிற பயணிகளுக்கு தொந்தரவு அளித்துள்ளார்.

மேலும் அந்த பயணி கீழே தள்ளப்பட்ட விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்த நிலையில் கண்டக்டர் பிரகாசை சஸ்பெண்டு செய்து விழுப்புரம் கோட்ட மேலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Tags:    

Similar News