தமிழ்நாடு
சுதந்திர தின விழா- ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றினார்
- சுதந்திர தின விழாவையொட்டி கிண்டியில் உள்ள ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
- அரவிந்தரின் 150-வது பிறந்தநாளையொட்டி அவரது படத்துக்கு கவர்னர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை:
சுதந்திர தின விழாவையொட்டி கிண்டியில் உள்ள ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து மத்திய பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் மத்திய படையினர் மற்றும் அங்கு திரண்டு இருந்தவர்களுக்கு சுதந்திர தின வாழ்த்து கூறி இனிப்புகள் வழங்கினார்.
அரவிந்தரின் 150-வது பிறந்தநாளையொட்டி அவரது படத்துக்கு கவர்னர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் கவர்னரின் மனைவி லட்சுமி ரவியும் கலந்து கொண்டார்.