தமிழ்நாடு

பிரபல தொழில் அதிபர் அபிராமி ராமநாதனிடம் ஐ.டி. அதிகாரிகள் விசாரணை

Published On 2023-11-04 12:28 IST   |   Update On 2023-11-04 12:28:00 IST
  • கஸ்தூரி எஸ்டேட்டில் உள்ள அலுவலகத்தில் சோதனை
  • வீட்டில் இருந்து கணக்கில் வராத நகைகள் கைப்பற்றப்பட்டன

வருமான வரித்துறையினர் நேற்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை இன்றும் நீடித்து வருகிறது.

நேற்று தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகம் மற்றும் கல்லூரிகளில் சோதனை நடைபெற்றது. அதோடு பல்வேறு தனியார் நிறுவனங்களிலும் சோதனை நடைபெற்றது.

அந்த வகையில் கஸ்தூரி எஸ்டேட்டில உள்ள பிரபல தொழில் அதிபர் அபிராமி ராமநாதனின் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது. மேலும் அவரது வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்றது.

அவரது வீட்டில் கணக்கில் வராத நகைகள் கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட நகைகள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அபிராமி ராமநாதனை விசாரணைக்காக அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணை முடிவில் வரிமான வரி ஏய்ப்பு செய்துள்ளாரா? என்பது தெரியவரும்.

Tags:    

Similar News