தமிழ்நாடு

மதுராந்தகம் அருகே மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆம்புலன்சை ஓட்டிச்சென்றதால் பரபரப்பு

Published On 2023-01-21 06:51 GMT   |   Update On 2023-01-21 06:51 GMT
  • ஆம்புலன்ஸ் டிரைவர் அரசு பேருந்தில் ஏறி விரட்டி சென்று ஆம்புலன்சை மடக்கி பிடித்தார்.
  • பாலாஜி விபத்து ஒன்றில் படுகாயம் அடைந்து மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

மதுராந்தகம்:

மதுராந்தகம் அருகே உள்ள கருங்குழி என்ற இடத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை காற்று பிடிப்பதற்காக சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு டிரைவர் டயரை சோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென்று ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏறி அதை ஓட்டிச் சென்றார்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் டிரைவர் அரசு பேருந்தில் ஏறி விரட்டி சென்று ஆம்புலன்சை மடக்கி பிடித்தார். ஆம்புலன்சை திருடி சென்ற நபருக்கு பொது மக்கள் தர்ம அடி கொடுத்து மதுராந்தகம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம், விசாரணை செய்ததில் தனது பெயர் பாலாஜி என்கிற விக்கி என்றும் மதுராந்தகம் அருகே உள்ள திருவாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் என்றும் கூறினார். பின்னர் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.

கடந்த 6 மாதத்திற்கு முன்பு அவர் விபத்து ஒன்றில் படுகாயம் அடைந்து மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், உடல் முழுவதும் பலத்த காய தழும்புகள் உள்ளதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

Tags:    

Similar News