தமிழ்நாடு

டெல்லியில் வளைந்த முதுகோடு தமிழ்நாட்டை அடகு வைத்தது அதிமுக- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2025-03-12 19:07 IST   |   Update On 2025-03-12 19:07:00 IST
  • திமுக ஆட்சியின் எண்ணற்ற திட்டங்களால் தமிழ்நாட்டை இந்தியாவே திரும்பிப் பார்க்கிறது.
  • தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சி நடப்பதாக மத்திய அரசே அறிக்கைகள் மூலம் சொல்கிறது.

மத்திய பாஜக அரசை கண்டித்து திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

மத்திய பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் இன்று கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்ற தலைப்பில் தமிழக முழுவதும் திமுக பொதுக்கூட்டம் நடைபெறுகின்றனர்.

அதன்படி, தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பை கண்டித்து திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

கண்டன பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும். தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியில் வளைந்த முதுகோடு அடகு வைத்த ஆட்சி தமிழகத்தில் நடந்தது.

திமுக ஆட்சியின் எண்ணற்ற திட்டங்களால் தமிழ்நாட்டை இந்தியாவே திரும்பிப் பார்க்கிறது. தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சி நடப்பதாக மத்திய அரசே அறிக்கைகள் மூலம் சொல்கிறது.

கொள்ளைப்புறம் வழியாக வலதுசாரி சிந்தனைகளை தமிழ்நாட்டில் புகுத்த பாஜக முயற்சிக்கிறது. ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்களுக்கான குரலாக திமுக எப்போதும் ஒலிக்கும்.

பிரதமர் மோடி சர்வாதிகார எண்ணத்தோடு செயல்படுகிறார். மாநில அரசுகள் டெல்லிக்கு காவடி தூக்கும் நிலைமையை மாற்றி, அதிகார பகிர்வுக்கு வழிவகுப்பேன் என பிரதமர் மோடி சொன்னார்.

வரி விதிப்பில் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. கூட்டாட்சி தத்துவத்தை ஆதரிப்பதாக சொன்ன நீங்கள், அப்படி செய்ததாக ஒரு சாட்சியை காட்ட முடியுமா ?

மாற்றுக்கட்சி ஆளும் மாநிலங்களை பழிவாங்க மாட்டேன் என சொல்லிவிட்டு, பழிவாங்கும் அரசியலை மட்டுமே செய்கிறீர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News