தமிழ்நாடு
பா.ஜ.க. தான் நயவஞ்சகர்கள்- நிர்மலா சீதாராமனுக்கு வைகோ பதிலடி
- பா.ஜ.க. தமிழ் நாட்டின் அரசியல் எதிரிகள்.
- தி.மு.க. நயவஞ்சகர்கள் அல்ல.
தமிழ்மொழி விஷயத்தில் தி.மு.க. நாடகமாடுவதாக பாராளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இதற்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பதிலடி கொடுத்தார். அவர் கூறியதாவது:-
அவர்கள் (பா.ஜ.க.) தமிழ் நாட்டின் அரசியல் எதிரிகள். அவர்கள் ஏதாவது சொல்ல வேண்டும். தி.மு.க. நயவஞ்சகர்கள் அல்ல. அவர்கள் (பா.ஜ.க.) நயவஞ்சகர்கள்.
இவ்வாறு வைகோ கூறினார்.