தமிழ்நாடு
ஊத்து எஸ்டேட்டில் 9 சென்டிமீட்டர் மழை பதிவு
- மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதி இந்தியாவிலேயே அதிக மழை பொழிவு பெறும் இடமாகும்.
- நாலுமுக்கில் 7 சென்டிமீட்டரும், காக்காச்சியில் 6.5 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதி இந்தியாவிலேயே அதிக மழை பொழிவு பெறும் இடமாகும். இங்கு நேற்று முன்தினம் இரவு தொடங்கி கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
இன்று காலை நிலவரப்படி ஊத்து எஸ்டேட்டில் 9 சென்டிமீட்டர் மழை கொட்டித்தீர்த்துள்ளது. நாலுமுக்கில் 7 சென்டிமீட்டரும், காக்காச்சியில் 6.5 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. மாஞ்சோலை சுற்றுவட்டாரத்தில் சுமார் 5 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.