தமிழ்நாடு
- வழக்கமாக எல்லா வாழை மரங்களும் மேலிருந்து தான் குலை தள்ளும்.
- அதிசய வாழையை அப்பகுதியினர் அனைவரும் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.
முக்கூடல்:
நெல்லை மாவட்டம் முக்கூடல் இ.பி.குமாரவேல் தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவருடைய வீட்டில் உள்ள ஒரு வாழை அதிசயமாக குலை தள்ளி உள்ளது. வழக்கமாக எல்லா வாழை மரங்களும் மேலிருந்து தான் குலை தள்ளும்.
ஆனால் இந்த வாழை மரத்தில் நடுப்பகுதியில் இருந்து அதுவும் தண்டுக்கும், மேல் பகுதிக்கும் நடுவில் குலை தள்ளி உள்ளது. இது பார்ப்பதற்கு தண்டை கிழித்துக்கொண்டு வெளியில் வந்தது போல் உள்ளது. இந்த அதிசய வாழையை அப்பகுதியினர் அனைவரும் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.