தமிழ்நாடு

கொடைக்கானலில் சிலுசிலு காற்றுடன் சாரல் மழை- சுற்றுலா பயணிகள் உற்சாகம்

Published On 2023-07-25 10:13 IST   |   Update On 2023-07-25 10:13:00 IST
  • பலத்த காற்று காரணமாக கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
  • மின் தடை ஏற்படுவதால் உள்ளூர் மக்கள் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

கொடைக்கானல்:

கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு சாரல் மழை பெய்து வந்த நிலையில் தற்போது வெப்பத்தின் தாக்கம் அடியோடு குறைந்து மேக மூட்டமான வானிலை நிலவி வருகிறது. தொடர்ந்து குளிச்சியான காற்று மற்றும் சாரல் மழை பெய்து வருகிறது.

இதனால் பெரும்பாலான சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. குறைந்த அளவு சுற்றுலா பயணிகள் வந்துள்ள போதிலும் அவர்கள் குளிர்ச்சியான சூழலை சைக்கிளில் சென்று ரசித்து வருகின்றனர். சாரல் மழை காரணமாக பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். காலையில் வேலைக்கு செல்லும் தொழிலாளர்களும் அவதியடைந்துள்ளனர்.

கொடைக்கானல், மேல்மலை, கீழ் மலை கிராமங்களான மன்னவனூர், கிளாவரை, பேத்துப்பாறை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது.

அவ்வப்போது மின் தடை ஏற்படுவதால் உள்ளூர் மக்கள் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். பலத்த காற்று காரணமாக கொடைக்கானல் ஏரியில் படகு சவாரியும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆங்காங்கே மரங்கள் விழுந்து வருவதால் அதனை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வழக்கமாக வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

ஆனால் தற்போது குறைந்த அளவு சுற்றுலா பயணிகள் வந்ததாலும் அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு ரம்யமான அழகை ரசித்து செல்கின்றனர்.

இதனால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags:    

Similar News