தமிழ்நாடு

தைலாபுரத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பா.ம.க. நிறுவனத் தலைவர் ராமதாஸ் மாலை அணிவித்தபோது எடுத்த படம்.

மழை தொடர்ந்திருந்தால் நினைத்து பார்க்க முடியாத பாதிப்பு சென்னைக்கு ஏற்பட்டிருக்கும்: ராமதாஸ்

Published On 2023-12-06 07:37 GMT   |   Update On 2023-12-06 07:43 GMT
  • சென்னை மக்கள் மிகவும் துயரத்தில் உள்ளனர்.
  • அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் அனைத்திலும் தண்ணீர் நிற்கிறது.

திண்டிவனம்:

அம்பேத்கரின் நினைவுதினத்தை முன்னிட்டு பா.ம.க. நிறுவனத் தலைவர் ராமதாஸ், திண்டிவனம் தைலாபுரத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட செயலாளர் ஜெயராஜ். நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது:-

சென்னையில் பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்னுடைய அனுதாபங்கள். இன்னும் ஒரு நாள் சென்னையில் மழை பெய்தால் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு சென்னை பாதிக்கப்பட்டிருக்கும். சென்னை மக்கள் மிகவும் துயரத்தில் உள்ளனர். இது சம்பந்தமாக விரிவான அறிக்கை ஒன்றை நான் கொடுத்திருக்கிறேன்.

அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் அனைத்திலும் தண்ணீர் நிற்கிறது. செலவு செய்யப்பட்ட பணம் அனைத்தும் பாதாளத்தில் விடப்பட்டுள்ளதா? ஒன்றுமே தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News