தமிழ்நாடு

பாஜகவிடம் சீட் கேட்டு நிற்க வேண்டுமா? அப்படியொரு நிலைவந்தால் செத்துவிடுவோம் - செல்லூர் ராஜு

Published On 2024-08-13 13:02 GMT   |   Update On 2024-08-13 13:02 GMT
  • கூட்டணி ஆட்சிக்கு தயார் என்று அதிமுக அறிவித்தால், பாஜக கூட்டணியில் இடம் பெறலாம் என அண்ணாமலை பேசியிருந்தார்.
  • அண்ணாமலையிடம் சீட் கேட்டு அதிமுக நிற்க வேண்டுமா? என்று செல்லூர் ராஜு ஆவேசம்.

"அதிமுகவின் வாக்கு விகிதம் 40%-லிருந்து 19%-ஆக குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு தயார் என்று அதிமுக அறிவித்தால், பாஜக கூட்டணியில் இடம் பெறலாம்" என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ காட்டமாக பதில் அளித்துள்ளார்.

"அண்ணாமலையிடம் சீட் கேட்டு அதிமுக நிற்க வேண்டுமா? என்ன வாய்கொழுப்போடு பேசுகிறார்கள் பாருங்கள். அதிமுகவுக்கு இப்படி ஒரு நிலை நிலைவந்தால் நாங்கள் செத்துவிடுவோம்" என்று செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News