மாதேஸ்வரன் கோவிலுக்கு செல்ல முடியாமல் 2 மாநில பக்தர்கள் தவிப்பு
- தமிழகத்தின் எல்லையை அடுத்துள்ள கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையில் மாதேஸ்வர சுவாமி கோவில் உள்ளது.
- சிவராத்திரியை அடுத்த 3-ம் நாளில் தேர்த்திருவிழா நடைபெறும் .
மேட்டூர்:
தமிழகத்தின் எல்லையை அடுத்துள்ள கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையில் மாதேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சிவராத்திரி உற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். சிவராத்திரியை அடுத்த 3-ம் நாளில் தேர்த்திருவிழா நடைபெறும் .
அதன்படி மாதேஸ்வரன் மலையில் சிவராத்திரி உற்சவம் இன்று தொடங்கியது. விழாவில் கர்நாடக மாநிலத்தில் இருந்து மட்டும் அல்லாமல் சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட தமிழக மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பது வழக்கம். இதையொட்டி தமிழகத்தில் இருந்து சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் தற்போது மேட்டுர் மீனவர் ராஜா கர்நாடக வனத்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தால் இரு மாநில எல்லையிலும் பதட்டம் நிலவுகிறது. போக்குவரத்து நிறுத்தப்பட்டு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாதேஸ்வரன் மலைக்கு செல்ல முடியாமல் 2 மாநில பக்தர்களும் தவிக்கின்றனர்.