தமிழ்நாடு

பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

Published On 2023-11-21 07:21 GMT   |   Update On 2023-11-21 07:21 GMT
  • நீடாமங்கலத்தை சேர்ந்த இசையியல் அறிஞர் பி.எம்.சுந்தரத்துக்கும் கவுரவ டாக்டர் பட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.
  • நிகழ்ச்சியில் இணை வேந்தரான அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா உள்ளிட்ட பேராசிரியர்கள், செனட் உறுப்பினர்கள் மாணவ-மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

சென்னை:

இந்தியாவின் முன்னணி திரைப்படப் பின்னணி பாடகி இசைக்குயில், மெல்லிசை அரசி பி.சுசீலா.

ஆந்திராவை சேர்ந்த இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்பட பல இந்திய மொழிகளில் 40 ஆண்டு காலமாக 25 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.

இசையரசியான இவரை கவுரவிக்கும் வகையில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் வேந்தரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பி.சுசீலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தார்.

இந்த விழாவில் நீடாமங்கலத்தை சேர்ந்த இசையியல் அறிஞர் பி.எம்.சுந்தரத்துக்கும் கவுரவ டாக்டர் பட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.

நிகழ்ச்சியில் இணை வேந்தரான அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா உள்ளிட்ட பேராசிரியர்கள், செனட் உறுப்பினர்கள் மாணவ-மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News