தமிழ்நாடு (Tamil Nadu)

நடைபயிற்சி மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: வழிநெடுகிலும் பொது மக்கள் உற்சாக வரவேற்பு

Published On 2023-08-27 04:05 GMT   |   Update On 2023-08-27 04:05 GMT
  • மாணவிகள் முதலமைச்சருடன் கைகுலுக்கி போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.
  • தூய்மை பணியாளர்கள் முதலமைச்சருக்கு வணக்கம் தெரிவித்தனர். பதிலுக்கு அவரும் வணக்கம் தெரிவித்தார்.

திருவாரூர்:

மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 24-ந்தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார். பின்னர் கார் மூலம் மயிலாடுதுறை சென்று அங்கு நடந்த தருமபுரம் ஆதீன கல்லூரி விழாவில் கலந்து கொண்டார்.

பின்னர் நாகை மாவட்டம் திருக்குவளை அரசு பள்ளியில் விரிவாக்கம் செய்யப்பட்ட காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். நேற்று நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 4 மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகளுடன் களஆய்வு நடத்தினர்.

பின்னர் திருவாரூரில் உள்ள தனது சொந்த வீட்டிற்கு சென்று தங்கினார். இன்று காலை நடை பயிற்சி மேற்கொள்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டார்.

திருவாரூர் வடக்கு வீதி வழியாக சென்று தியாகராஜர் கோவிலுக்கு சொந்தமான கமலாலயக் குளத்தை சுற்றி தெற்கு மட வளாகம் வழியாக மீண்டும் வீட்டிற்கு வந்தார்.

முன்னதாக முதலமைச்சர் நடை பயிற்சி மேற்கொண்ட போது வழிநெடுகிலும் பொது மக்கள் அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

மாணவிகள் முதலமைச்சருடன் கைகுலுக்கி போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.

தூய்மை பணியாளர்கள் முதலமைச்சருக்கு வணக்கம் தெரிவித்தனர். பதிலுக்கு அவரும் வணக்கம் தெரிவித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நகராட்சி அலுவலகம் அருகே நடந்து வந்து கொண்டிருந்த போது பொது மக்கள் அவருக்கு புத்தகங்களை பரிசளித்தனர்.

இதையடுத்து திருவாரூரில் நடக்கும் செல்வராஜ் எம்.பி. இல்ல திருமணவிழாவில் கலந்து கொள்கிறார். பின்னர் நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிந்ததும் கார் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு செல்கிறார்.

Tags:    

Similar News