தமிழ்நாடு

எங்கள் வீட்டில் எல்லா நாளும் சந்தோஷம்... வைரலாகும் யானை வீடியோ

Published On 2024-05-17 10:50 IST   |   Update On 2024-05-17 10:57:00 IST
  • குட்டி யானையை மற்ற யானைகள் பாதுகாப்பது பார்ப்போரை மெய் சிலிர்க்க வைக்கிறது.
  • வீடியோ மூலம் ஆறு அறிவு உள்ள மனிதர்களுக்கு இருக்கும் அதே பாச உணர்வை ஐந்தறிவு கொண்ட விலங்குகளிடம் காண முடிகிறது.

இன்றைய உலகில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஏராளமான வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்கள் பதிவிடப்படுகின்றன.

அந்த வகையில், தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி சுப்ரியா சாகு பகிர்ந்த வீடியோ வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதியில் அழகான 5 யானைகள் கொண்ட குடும்பம் ஒன்று ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது. குட்டி யானையை மற்ற யானைகள் பாதுகாப்பது பார்ப்போரை மெய் சிலிர்க்க வைக்கிறது.

இந்த வீடியோ மூலம் ஆறு அறிவு உள்ள மனிதர்களுக்கு இருக்கும் அதே பாச உணர்வை ஐந்தறிவு கொண்ட விலங்குகளிடம் காண முடிகிறது.

வீடியோ பகிர்ந்த சுப்ரியா சாகு கூறியுள்ளதாவது:- தமிழ்நாட்டின் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் ஆழமான காடுகளில் எங்கோ ஒரு அழகான யானைக் குடும்பம் ஆனந்தமாக உறங்குகிறது. குட்டி யானைக்கு குடும்பத்தால் இசட் வகுப்பு பாதுகாப்பு எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதைக் கவனியுங்கள். மற்ற குடும்ப உறுப்பினர்களின் இருப்பை உறுதி செய்வதற்காக இளம் யானை எவ்வாறு சரிபார்க்கிறது. நமது சொந்தக் குடும்பங்களைப் போலவே இருக்கிறது அல்லவா என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News