தமிழ்நாடு

வார இறுதியில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை

Published On 2024-07-06 09:53 IST   |   Update On 2024-07-06 09:53:00 IST
  • வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
  • தங்கம் விலை இந்த வாரத்தில் மட்டும் சவரனுக்கு ரூ.1,080 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை:

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களாக உயர்ந்து விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில் வார இறுதி நாளான இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

தங்கம் இன்று சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,560-க்கும் கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,820-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் 60 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.99.30-க்கும் கிலோவுக்கு ரூ.1,600 உயர்ந்து பார் வெள்ளி ரூ.99,300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை இந்த வாரத்தில் மட்டும் சவரனுக்கு ரூ.1,080 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News