தமிழ்நாடு

கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள்- அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்

Published On 2023-09-01 14:43 IST   |   Update On 2023-09-01 14:43:00 IST
  • மருத்துவ வசதிகள் மற்றும் காவல் நிலையம் குறித்தும் அமைச்சர் ஆலோசனை நடத்தினர்.
  • இளங்கோவன், கூடுதல் துணை ஆணையர் அன்வர் பாஷா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை:

சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழும அமைச்சரும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும கட்டிடத்தின் 5வது மாடியின் மேற்குப் பகுதியில் நிறுவனத்திடம் மாத வாடகைக்கு பெற்று நவீன வசதிகளுடன் புணரமைக்கப்பட்டுள்ள அலுவலக பகுதியினை திறந்து வைத்தார்.

அதை தொடர்ந்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிளாம்பாக்கம் புதிய பஸ் முனையத்திலிருந்து பஸ்கள் போக்குவரத்து நெரிசலின்றி செல்வதற்காக அயனஞ்சேரி முதல் மீனாட்சிபுரம் வரையிலும், சி.வே.கே.சாலை முதல் ஊரப்பாக்கம் நல்லம் பாக்கம் வரையிலும், ஆதனூர் முதல் மாடம்பாக்கம் வரையிலும் சாலை அமைக்கும் பணிகளையும், முடிச்சூரில் புதிதாக அமையவுள்ள ஆம்னி பஸ் நிறுத்திமிடத்தில் நடைபெறும் பணிகள் குறித்தும், மழைநீர் வடிகால் பணிகள், திடக்கழிவு மேலாண்மை, பூங்காக்களில் நடைபெற்று வரும் பணிகள், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் அமைய உள்ள மருத்துவ வசதிகள் மற்றும் காவல் நிலையம் குறித்தும் அமைச்சர் ஆலோசனை நடத்தினர்.

கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, நிர்வாக இயக்குநர்கள் குணசேகரன், இளங்கோவன், கூடுதல் துணை ஆணையர் அன்வர் பாஷா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News