த.வெ.க. வியூக வகுப்பாளர் ஆடியோ சர்ச்சை: கட்சி நிர்வாகிகளிடம் புஸ்ஸி ஆனந்த் விளக்கம்
- புஸ்ஸி ஆனந்த் குறித்து ஆரோக்கியசாமி பேசிய வீடியோ சர்ச்சையானது.
- சமூக ஊடகங்கள் வாயிலாக பரப்பப்படும் அவதூறுகளை யாரும் நம்ப வேண்டாம்- புஸ்ஸி ஆனந்த்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் பனையூரில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர்களை தேர்வு செய்வதற்கான இந்த மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தின்போது வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கிய சாமி பேசிய ஆடியோ சர்ச்சையானது தொடர்பாக நிர்வாகிகளுக்கு விளக்கம் அளித்து அறிவுரை வழங்கியுள்ளார்.
அப்போது புஸ்ஸி ஆனந்த் "சமூக ஊடகங்கள் வாயிலாக பரப்பப்படும் அவதூறுகளை யாரும் நம்ப வேண்டாம். காழ்புணர்ச்சியால் பரப்பப்படும் குற்றச்சாட்டுகளை கண்டு உணர்ச்சிவசப் படக்கூடாது" எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் விஜயைவிட தன்னை முன்னிலைப்படுத்த புஸ்ஸி ஆனந்த் முயற்சிப்பதாக ஜான் ஆரோக்கியசாமி பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு புஸ்ஸி ஆனந்த் விளக்கம் அளித்து, அறிவுரை வழங்கியுள்ளார்.