தமிழ்நாடு

அவனியாபுரத்தில் கடந்த ஆண்டை போலவே மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஜல்லிக்கட்டு.. நீதிமன்றம் உத்தரவு

Published On 2025-01-10 16:59 IST   |   Update On 2025-01-10 16:59:00 IST
  • ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
  • 16 பேரை கொண்ட அவனியாபுரம் ஆலோசனை குழுவில் மனுதாரரும் இணைக்கப்பட்டுள்ளார்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் அவனியாபுரத்தில் வருகிற 14-ந்தேதியும், பாலமேட்டில் 15-ந்தேதியும், அலங்காநல்லூரில் 16-ந் தேதியும் நடக்கிறது.

இதனால், ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

இந்நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனைத்து சமூகத்தினரையும் ஒன்றிணைத்து குழு அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தமிழ்நாடு அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு போலவே மாவட்ட ஆட்சியர் தலைமையில் தான் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்தது.

மேலும், 16 பேரை கொண்ட அவனியாபுரம் ஆலோசனை குழுவில் மனுதாரரும் இணைக்கப்பட்டுள்ளார் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இறுதியில், அனைத்து சமூகத்தினரையும் ஒன்றிணைத்து குழு அமைத்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த கோரிய வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News