தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவுடன் மு.க.ஸ்டாலின் இன்றிரவு காணொலியில் ஆலோசனை
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த குழுவினரிடம் கட்சி செயல்பாடு குறித்து கேட்டறிகிறார்.
- 2026 சட்டசபை தேர்தலுக்கான வியூகம் குறித்தும் சில ஆலோசனை வழங்குவார் என தெரிகிறது.
சென்னை:
தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். தற்போது அவர் சிகாகோ நகரில் உள்ளார்.
இன்றிரவு சிகாகோ நகரில் இருந்தபடி தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவுடன் அவர் காணொலியில் ஆலோசனை நடத்துகிறார்.
தி.மு.க. ஒருங்கிணைப்பு குழுவில் உள்ள கட்சியின் முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் காணொலி வாயிலாக இணைகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த குழுவினரிடம் கட்சி செயல்பாடு குறித்து கேட்டறிகிறார்.
மாவட்டந்தோறும் பொது உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்துமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த கூட்டம் எந்த அளவில் நடத்தப்பட்டுள்ளது என்பதையும் கேட்டறிகிறார்.
அது மட்டுமின்றி 2026 சட்டசபை தேர்தலுக்கான வியூகம் குறித்தும் சில ஆலோசனை வழங்குவார் என தெரிகிறது.