தமிழ்நாடு
திருச்சியில் அண்ணாமலை உட்பட 700 பேர் மீது வழக்கு பதிவு
- தேர்தல் பிரசாரத்துக்கு இன்னும் 17 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- 700 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் திருச்சி தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருச்சி:
பாராளுமன்ற தேர்தல் களம் தமிழகத்தில் சூடு பிடித்துள்ளது. தேர்தல் பிரசாரத்துக்கு இன்னும் 17 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக மாநில தலைவரும், கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை உட்பட 700 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து அண்ணாமலை நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது இரவு 10 மணிக்கு மேல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது.
இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அண்ணாமலை, அமமுக வேட்பாளர் செந்தில் நாதன், அமமுக அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான் உட்பட 700 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் திருச்சி தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.