தமிழ்நாடு

போலீஸ் நிலையத்தில் ஸ்டிக்கர்களை அகற்றும் பணியில் ஈடுபட்ட போலீசார்


சொந்த வாகனங்களில் ஒட்டியிருந்த போலீஸ் ஸ்டிக்கர்கள் அகற்றம்- நீலகிரியில் போலீசார் மும்முரம்

Published On 2022-07-20 10:12 IST   |   Update On 2022-07-20 10:12:00 IST
  • தமிழகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள், அலுவலக வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது.
  • போலீசார் தங்கள் சொந்த வாகனங்களில் ஒட்டியிருந்த போலீஸ் ஸ்டிக்கரை அகற்றத் தொடங்கி உள்ளனர்.

ஊட்டி:

தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு, அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதில் தமிழகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள், அலுவலக வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது. தங்கள் சொந்த தேவைக்காக பயன்படுத்தும் வாகனங்களில், போலீஸ் போர்டு மற்றும் ஸ்டிக்கரை காட்சிப்படுத்தக் கூடாது, அலுவலக வாகனங்களில் மட்டுமே போலீஸ் போர்டு மற்றும் ஸ்டிக்கர் பயன்படுத்த வேண்டும்.

எனவே அனைத்து போலீசாரும் தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் போர்டு அல்லது ஸ்டிக்கர் பயன்படுத்தி வந்தால் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார்.

இதைத்தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் போலீசார் தங்கள் சொந்த வாகனங்களில் ஒட்டியிருந்த போலீஸ் ஸ்டிக்கரை அகற்றத் தொடங்கி உள்ளனர்.

கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பயன்படுத்தும் 3 கார்கள், 14 மோட்டார் சைக்கிள்களில் ஒட்டப்பட்டிருந்த போலீஸ் ஸ்டிக்கர்களை போலீசார் அகற்றினர். இதுதொடர்பான அறிக்கை போலீஸ் உயர்அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என கோத்தகிரி போலீசார் தெரிவித்தனர். இதேபோல மற்ற போலீஸ் நிலையங்களிலும் வாகனங்களில் ஸ்டிக்கர் அகற்றும் பணி தொடங்கி உள்ளது.

Tags:    

Similar News