தமிழ்நாடு
கனமழை எச்சரிக்கை.. மூன்று மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
- தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது.
- பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள சூழ்நிலையில், பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகம் முழுக்க நவம்பர் 6-ம் தேதி வரை கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதோடு தமிழகத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். இதே போன்று கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களிலும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் என அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.