தமிழ்நாடு

சென்ட்ரலில் பொதுமக்கள் வசதிக்காக ஷாப்பிங்மால் : தியேட்டர்களுடன் 15 மாடியில் 2 டவர் கட்டிடங்கள்

Published On 2022-10-20 15:07 IST   |   Update On 2022-10-21 08:45:00 IST
  • சென்ட்ரல் சதுக்கத்தில் ரூ.400 கோடி செலவில் பல்வேறு திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • பிரமாண்ட 2 டவர் கட்டிடங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை:

சென்னை மாநகரின் முக்கிய அடையாளமாக சென்ட்ரல் ரெயில் நிலையம் திகழ்கிறது. இங்கு பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகின்றன.

சென்ட்ரலில் மெட்ரோ, மின்சார ரெயில்நிலையங்கள், பஸ் நிலையங்கள் அனைத்தும் உள்ளன. இங்கு வரும் பயணிகளுக்காக பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே அமைக்கப்பட்ட சென்ட்ரல் சதுக்கம் பயணிகளிடம் வரவேற்பு பெற்று உள்ளது. நடைபாதைகள், ஓய்வு இருக்கைகள், சுரங்க நடைபாதைகள், புல்வெளிகள் ஆகிய பல்வேறு வசதிகளை பயணிகள் ஆர்வமாக பயன்படுத்தி வருகின்றனர்.

சென்ட்ரல் சதுக்கம் திட்டத்தின் மேலும் ஒரு பகுதியாக 2 டவர் கட்டிடங்கள் அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன. இது குறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சென்ட்ரல் சதுக்கத்தில் ரூ.400 கோடி செலவில் பல்வேறு திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிரமாண்ட 2 டவர் கட்டிடங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் 3 அடித்தளம், ஒரு தரை தளம், 15 மாடிகளுடன் டவர் கட்டிடம் அமைக்கப்படுகின்றன. 600 கார்கள், 1,600 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தும் வகையில் பூமிக்கு கீழே பிரமாண்ட வாகன நிறுத்தம் வசதி அமைக்கப்பட உள்ளது. தற்போது இந்த பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

மேலும் 7 மாடிகளுடன் இன்னொரு டவர் கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதில் 'ஷாப்பிங்மால், தியேட்டர்கள், விளையாட்டு திடல்கள், வணிக நிறுவன அலுவலகங்கள், உணவகங்கள் மற்றும் பல சிறப்பு அம்ச வசதிகள் உருவாக்கப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினர்.

Tags:    

Similar News