தமிழ்நாடு
ஃபெஞ்சல் புயல் பாதித்த பயிர்களுக்கு உடனே இழப்பீடு வழங்க வேண்டும்- ஜி.கே. வாசன் வலியுறுத்தல்
- விவசாயிகளின் நஷ்டத்தை ஈடு செய்யும் வகையிலும் நிதியை ஒதுக்கி தர வேண்டும்.
- பயிர்களுக்கான இழப்பீட்டை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக அரசு 2023, 2024 வடகிழக்கு பருவமழைக்கும், காலநிலை மாற்றத்தால் பெய்த மழைக்கும், காவிரியில் நீர் திறக்காததால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை சரி செய்யும் வகையிலும், விவசாயிகளின் நஷ்டத்தை ஈடு செய்யும் வகையிலும் நிதியை ஒதுக்கி தர வேண்டும்.
கடந்த 2024 ஃபெஞ்சல் புயல் மற்றும் வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு குறிப்பாக கடலை, உளுந்து, சோளம், வெங்காயம் ஆகிய பயிர்களுக்கான இழப்பீட்டை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு உரிய நிவாரணத்தொகையை வழங்க நிதியை ஒதுக்கி, காலத்தே வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.