தமிழ்நாடு
போக்சோவில் கைது செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் பணி இடைநீக்கம்
- சகாதேவன் தன்னை மிரட்டி பலமுறை தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிவித்தார்.
- போலீசார் சகாதேவனை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் சகாதவேன் புகார் கொடுக்க வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகள் நல உறுப்பினரிடம் அளித்த புகாரில் சகாதேவன் தன்னை மிரட்டி பலமுறை தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் குழந்தைகள் நல உறுப்பினர்கள் பென்னாகரம் நீதிமன்றத்தை நாடினர். பென்னாகரம் குற்றவியல் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண் நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏரியூர் போலீசார் மற்றும் பென்னாகரம் மகளிர் போலீசார் சகாதேவனை போக்சோ வழக்கில் கைது செய்து தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் உதவி ஆய்வாளர் சகாதவேன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.