ஆழ்வார்பேட்டை பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள்: ஒரு வாரத்துக்கு ஒரு வழிப்பாதையாக அமல்
- டி.டி.கே.சாலையில் சேமியர்ஸ் சாலை சந்திப்பில் இருந்து கவிஞர் பாரதிதாசன் சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
- சி.பி.ராமசாமி சாலையில் சி.வி.ராமன் சாலை சந்திப்பில் இருந்து ஆர்.ஏ. புரம் 2-வது பிரதான சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மெட்ரோ ரெயில் பணிகள் கவிஞர் பாரதிதாசன் சாலையில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக நாளை (சனிக்கிழமை) முதல் 11-ந்தேதி வரை ஒரு வார காலத்திற்கு கவிஞர் பாரதிதாசன் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றங்களை செய்ய உத்தேசிக்கப்பட்டு உள்ளன.
டி.டி.கே.சாலையில் சேமியர்ஸ் சாலை சந்திப்பில் இருந்து கவிஞர் பாரதிதாசன் சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சி.பி.ராமசாமி சாலையில் சி.வி.ராமன் சாலை சந்திப்பில் இருந்து ஆர்.ஏ. புரம் 2-வது பிரதான சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அண்ணாசாலையில் இருந்து கவிஞர் பாரதிதாசன் சாலை வழியாக டி.டி.கே. சாலைக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் மாற்று பாதையில் அனுப்ப உத்தேசிக்கப்பட்டு உள்ளது. அதன்படி மாநகர பஸ்கள் திருவள்ளூர் சாலை, எல்டாம்ஸ் சாலை வழியாகவும், இலகு ரக வாகனங்கள் சீதம்மாள் காலனி 1-வது பிரதான சாலை வழியாகவும் செல்லலாம்.
டி.டி.கே. சாலையில் இருந்து ஆழ்வார்பேட்டை சிக்னலுக்கு செல்ல வேண்டிய மாநகர பஸ்கள் திருவள்ளூர் சாலை மற்றும் எல்டாம்ஸ் சாலை வழியாகவும், இலகு ரக வாகனங்கள் சீதம்மாள் காலனி 1-வது பிரதான சாலை (அல்லது) சி.வி.ராமன் சாலை வழியாக மாற்று பாதையில் செல்லலாம்.
டி.டி.கே. சாலையில் உள்ள ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தில் இருந்து வரும் மாநகர பஸ்கள் நேராக சி.பி.ராமசாமி சாலை வழியாக சேமியர்ஸ் சாலைக்கு செல்லாம்.
லஸ் சர்ச் சாலை வழியாக ஆழ்வார்பேட்டை சிக்னலுக்கு செல்ல வேண்டிய மாநகர பஸ்கள் டி.டி.கே. சாலை, ஆழ்வார்பேட்டை மேம்பால சர்வீஸ் சாலை வழியாக செல்லலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.